Thursday, November 26, 2009

என்னைத் தேடி!!

உன்னை இழந்தேன்.
என்னைக் கண்டேன்!
என்னை இழந்தேன்.
மனித நேயத்தைக் கண்டேன்!

Thursday, November 19, 2009

கற்றதும் பெற்றதும்

சிரிக்கக் கற்றுத்தந்தாள்
அழக் கற்றுத்தந்தாள்
வாழவும் கற்றுத்தந்தாள் - இறுதியில்
என் பெற்றோரைப் பெற்றுத்தந்தாள்!!!!

Thursday, November 5, 2009

Yet to be named...

கண்ணுக்குள் நீ
என்பது பொய்
பிரச்சாரமடி...
கண்ணே நீதானடி
கண்ணே!!!!

Sunday, August 30, 2009

The Bucket List

1) wish to have a lunch with a poor who wanders for food.
2) a lonely long walk in the beach.
3) sponsor food for ashram kids atleast on my dear one's special days.
4) show love even if someone hurts.
5) ask mom about my birth and death.
.........
.........
.........

Saturday, July 11, 2009

அருவியை ரசித்துக் கொண்டிருக்கும்போது....

சிரித்துக் கொண்டு
விழுகிறாய் - நீ.
அதைப் பார்த்து
அழுதுக் கொண்டு
சாகிறேன் - நான்.

Saturday, June 6, 2009

சமர்ப்பனம்

யாவரையும் போல-
மரண நாளை குறித்துவிட்டுப்
பயணத்தை தொடங்கினேன்....

இதுவரை கடவுளைக் கண்டதுமில்லை
இனி காண விரும்பவுமில்லை!

குழந்தையாய் கருவாக்கியவளும் - தாய்
மனிதனாய் உருவாக்கியவளும் - தோழி
என்னையும் கடவுளாக்கியவனும் - நண்பன்
என் முன்னே
அன்பே சிவமாய்!

இவர்களின்றி என்னுலகம்
இவ்வளவு அழகாய் இருக்கக் கூடுமா?
இந்த கேள்வியோடு
இன்னும் தொடர்கிறது - எனது பயணம்.

நீங்கள் இன்றி
நானில்லை இன்று.
அழகான வாழ்விற்கு
அழகு சேர்த்த உங்களுக்கே
இப்பதிவு சமர்ப்பனம்.

Monday, May 25, 2009

கல்லூரி காலத்தில் எழுதியது....

இச்சைக் கொண்டேன் இமயத்யை எட்டிப் பார்க்க
இழந்துவிட்டேன் ஈரம் கொண்ட இதயத்தை
இன்னமும் புரியவில்லை இன்னது என்று
இறுதியில் புரிந்துக்கொண்டேன் 
இவ்வாழ்வு முடிந்துவிடுமென்று!

Sunday, May 24, 2009

ரயில் பயணம்

பாரதி பாடல்களை 
உதிர்க்க வேண்டிய
மழலைகளின் வாயில்
"வாட்டர் பாக்கெட் வாட்டர் பாக்கெட்"

காதல் என்றால் என்ன?

ஆணுக்குள் இருக்கும் தாய்மையை வெளிகொண்டுவரும் அற்புதக் கருவி.
பெண்களை போன்று இந்தப் பிரபஞ்சத்தில் மற்றொரு அழகான படைப்பு.