Monday, February 22, 2010

அன்புள்ள நண்பர்களே...

அன்புள்ள நண்பர்களே...
இதைப் படிக்கக் கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்!

நாம் பல்வேறு நபர்களை வாழ்வில் சந்தித்திருப்போம். இதில் எத்தனைப் பேர் நம் நண்பர்கள்(வாழ்வில் பாதுகாக்கப்பட வேண்டிய நட்புகள்) என்று பார்த்தால் மிகவும் சிலரே.
சிலநேரங்களில் எதிர்பார்ப்புகளினால் நட்பு முறிந்துவிடுகிறது. நட்பைப்பற்றி மனம்விட்டு பேசாததால், சொல்லாததால் புரியாமலே போய்விடுகிறது.
நேரத்தின் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கிறோம். என் வாழ்க்கைக் கடலில் நான் கண்டெடுத்த முத்துக்கள் நீங்கள் மூவரும்.
மனதளவில் இருந்தாலும் நமது நட்பை பற்றி உங்களிடம் நேராக பேசியதில்லை.

எத்தனை நண்பர்களை நான் சந்தித்தாலும், இறுதிவரை பொக்கிஷமாக கருதும் நட்பு உங்கள் மூவரின் நட்பு மட்டுமே. வெளிப்படையாக உங்களிடம் சொல்லவே இதை எழுதுகிறேன்.
நாம் பழகிய நாட்களில், எந்த வகையிலாவது உங்களை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நானும் சராசரி மனிதன் தானே. செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அன்பே சிவம்.

P.S. Murali, Jay and Kamesh are my three dear friends mentioned above (In the order I met in my life).

No comments:

Post a Comment