Sunday, February 28, 2010

என்னவென்று சொல்வது?

நாம் செய்த சத்தியங்கள்
நீராவியாய்...
கண்னைத் திறந்தப் பின்னே
அத்தனையும் கனவாய்!

நடைப் பிணமாய் நாள்தோறும்
நான் வாழ்கிறேன் இன்னாளும்.
நட்பை மட்டும் மனதில் கொண்டு
விட்டுவிட வேண்டும் இவ்வுயிரை யின்று.

நாம் சந்தித்தது விதியென்று
சொல்கின்றது மனமின்று.
வாழ்க்கை என்னவென்று விளக்கிக் காட்டியவள்
நானின்று வணங்க வேண்டியவள்.

அறிந்தும் அறியாமலும்
உன்னை இழந்தேன்..
தெரிந்தும் தெரியாமலும்
என்னைப் பெற்றேன்.

கடவுளின் அன்பு
தேவையில்லை எனக்கு
மனிதம் வென்றப் பின்பு!!!

No comments:

Post a Comment